ETV Bharat / bharat

'வெளிநாட்டு முதலீட்டுக்கு இந்தியா ஒரு சிறந்த இடம்' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: சிறு, குறு தொழில்கள், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு முதலீட்டார்களிடம் கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வெளிநாட்டு முதலீட்டிற்கு இந்தியா சிறந்த இடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari  MSME  Foreign investment  Economic Crisis  Covid 19  வெளிநாட்டு முதலீடு  நிதின் கட்கரி  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
'வெளிநாட்டு முதலீட்டுக்கு சிறந்த இடம் இந்தியா'- நிதின் கட்கரி
author img

By

Published : Jul 22, 2020, 12:02 PM IST

அமெரிக்க வர்த்தக சபையுடன் இணைந்து அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், "வறுமையை வெல்வதற்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் அரசின் முக்கியக் குறிக்கோள். வேலைவாய்ப்புகளை உருவாக்கமால் வறுமையை ஒழிப்பது என்பது முடியாத காரியம். அதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிறு, குறு தொழில்களிலும், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யுங்கள்.

கரோனா பெருந்தொற்று தற்காலிகமானது. அதிலிருந்து மீள்வதற்கும், பொருளாதாரப் போரில் வெற்றிபெறுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு மக்கள் கையில் பணப்புழக்கம் இருப்பது முக்கியமானது.

சிறு, குறு தொழில்களைப் பொறுத்தவரையில் முதலீட்டு வரம்பை நாங்கள் கணிசமாக உயர்த்தியுள்ளோம். வெளிநாட்டு முதலீடுகளுக்கு சிறந்த இடம் இந்தியாதான். தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது. இந்தியா பெரிய சந்தையைக் கொண்டிருக்கிறது.

திறன்பட்ட மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் இந்தியா உள்ளடக்கியிருக்கிறது. இப்போது, நாங்கள் திறன்பட்ட மனிதவளத்தையும் அதிகரித்துவருகிறோம். இப்போதுவரை சிறு, குறு தொழில்கள் துறை 11 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க எங்களுக்கு அதிக வெளிநாட்டு முதலீடுகள் தேவை" என்றார்.

இதையும் படிங்க: அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.