இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவிற்கு கரோனா பேரிடர் நிதி உதவியாக சுமார் 250 மில்லியன் டாலர் நிதி உதவியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து மாலத்தீவு நாட்டின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் உரையாடினார்.
இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேவை என்று வரும்போதெல்லாம் மாலத்தீவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டிவரும் நட்பு நாடாக திகழ்ந்துவருகிறது. மாலத்தீவு மக்கள் சார்பில் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, இரு நட்பு நாடுகளும் கரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாராத, பொருளாதாரப் பேரிடரை இணைந்து எதிர்கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 கிலோ எடையில் ஒரு எலுமிச்சைப் பழம்... ஆச்சரியத்தை ஏற்படுத்திய விவசாயி!