ETV Bharat / bharat

மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகளில் சேர இந்தியா ஆஸ்திரேலியாவை அழைக்க வாய்ப்பு - மலபார் கடற்படை கூட்டு பயிற்சி

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விரிவான தேசிய திறனை, பொருளாதார-நிதி குறியீடாகவோ அல்லது ராணுவ தொழில்நுட்ப வலிமையாகவோ இருந்தாலும், மிகவும் உறுதியான ‘பலமிக்கது’ என்று ஒப்பிடும்போது கடல் சார்ந்த ஒரு களத்தை தவிர, மற்றவை பெய்ஜிங்கிற்கு  சாதகமாகவே உள்ளது.

மலபார் கடற்படை கூட்டு பயிற்சி
மலபார் கடற்படை கூட்டு பயிற்சி
author img

By

Published : Jul 21, 2020, 8:25 AM IST

லடாக் பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்ந்து வரும் நிலைப்பாட்டின் பின்னணியில், ஒரு படைவிலக்க நடைமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட உள்ள முத்தரப்பு மலபார் கூட்டு கடற்படை பயிற்சிகளில் சேர ஆஸ்திரேலியாவை டெல்லி அழைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.

இந்த விஷயத்தை மறுஆய்வு செய்த இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் சேர முறையான அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெற்ற கூட்டத்தை மேற்கோள்காட்டி ஊடக அறிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நான்கு நாடுகளிடையே ஒரு திட்டமிட்ட அமைப்பான க்வாட் அமைப்பிற்கு இப்போது இருப்பதை விட அதிக செயல்பாட்டு வரையறை வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நான்கு நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு கடல் / கடற்படை ஒத்துழைப்பை நோக்கி நகரும் சமிக்ஞைகள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், க்வாட் பயிற்சியின் விளைவாக கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் என்ன நடக்கும் என்பதை மிகைப்படுத்திக் கொள்வது தவறாக வழிநடத்தும். தற்போதைய நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதி முழுவதும் பதற்றத்தைத் தீர்ப்பது என்பது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இரு தரப்பு விவகாரமாகவே இருக்கும், இது நீண்டகாலமாக தொடரும் விவகாரமாகவும் இருக்கலாம்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விரிவான தேசிய திறனை, பொருளாதார-நிதி குறியீடாகவோ அல்லது ராணுவ தொழில்நுட்ப வலிமையாகவோ இருந்தாலும், மிகவும் உறுதியான ‘பலமிக்கது’ என்று ஒப்பிடும்போது கடல் சார்ந்த ஒரு களத்தை தவிர, மற்றவை பெய்ஜிங்கிற்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட கடற்படை திறனின் வளர்ச்சி டெல்லிக்கு சாதகத்தை கொடுத்தாலும் ஒரு குறுகிய கால இடைவெளியில் பெய்ஜிங் அதை சரிசெய்து விடும்.

ஆம், சமீபத்திய ஆண்டுகளில், உலகப் பெருங்கடல்களின் அமெரிக்க ஆதிக்கம் தொடர்பாக, கடல்சார் களத்தில், மலாக்கா தடுமாற்றம் போன்றவற்றில் சீனா தனது பிரச்னைகளை கருத்தில் கொண்டு கடற்படையின் ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கான பாராட்டத்தக்க உறுதியுடன் முன்னேறியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சீன கடற்படையின் வளர்ச்சி அசாதாரணமானது. இதனை பனிப்போர் காலங்களில் புகழ்பெற்ற அட்மிரல் கோர்ஷ்கோவ் சோவியத் கடற்படையை வளர்த்த விதத்துடன் ஒப்பிடலாம்.

தற்போது சீனா உலகளாவிய சமூகத்திற்கு இரண்டு சவால்களை முன்வைக்கிறது - முதலாவது கோவிட்-19 தொற்றுநோய் விவகாரத்தில் பெய்ஜிங் உண்மையான ஆக்கபூர்வமான நிலையை வகிக்க தயாராக உள்ளது. ஜி ஜின்பிங் ஆட்சியில் சில நாடுகளை பாதிக்கும் விதமாக நில எல்லைகள் / பிரதேசங்கள் (தைவான்) மற்றும் கடல்சார் உரிமைகோரல்கள் ஆகியவற்றுடன் கைப்பற்றுவது மற்றும் பி.ஆர்.ஐ (பெல்ட் மற்றும் சாலை முயற்சி) ஒருங்கிணைப்பில் உறுதி போன்றவை இரண்டாவது சவால்.

1949ஆம் ஆண்டில் உருவான சீன கம்யூனிச அரசு தோன்றியதன் நூற்றாண்டு கொண்டாட்டமான 2049ஆம் ஆண்டில் உலகளாவிய முதல் இடத்தை எட்டுவதற்கு சீனா எந்தவித இரக்கமின்றி நகர்கிறது என்ற கவலை பல தலைநகரங்களில் வளர்ந்து வருகிறது. மேலும், சீனா தலைமையிலான கிழக்கு ஆசியாவில் அமைதியின் காலங்களைக் குறிக்கும் அதன் சொந்த pax Sinicaவின் வரலாற்று பதிப்பை திணிக்கிறது

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான குறிப்பிட்ட கடல்சார் களம் சீனா சவாலின் நீண்டகால நிர்வாகத்தில் சாத்தியமான ஒரு குறிப்பிட்ட திறனை வழங்குகிறது, மேலும் இங்குதான் க்வாட் அமைப்பின் தேவை அவசியமாகிறது. ஆயினும்கூட, இது சீனா வர்த்தக-தொழில்நுட்ப-உள்கட்டமைப்புத் துறைகளில் தற்போது உலகளாவிய தடம் பதித்திருப்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய பல சிக்கலான முரண்பாடுகளுடன் கூடிய ஒரு சவாலான வேலை என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

க்வாட் நாடுகளிடையே கூட, சீனாவுடனான அவர்களின் இரு-பக்க உறவு முரண்பாடுகள் பல வழிகளில் தொடர்கிறது, அவை அனைத்தும் அந்த நாட்டுடன் மட்டும் தொடர்புடையவை அல்ல, உலகளாவிய சந்தை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப இடை-சார்புநிலைகள் போன்றவை எளிதான இருநிலை விருப்பத்தின் சாத்தியத்தையும் அழித்துவிட்டன. அமெரிக்கா - சீனா போட்டி உத்திசார் ரீதியான நிலையில் இருக்கும்போது, ​​ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பெய்ஜிங் உடனான உறவுகள் மிகவும் சிக்கலானவை, ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சீனாவுடன் ஒரு வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவைக் கொண்டிருக்கின்றன, அவற்றை திடீரென துண்டிக்க முடியாது.

சீனாவிற்கும் இது பொருந்தும், இது க்வாட் உறுப்பினர்கள் மற்றும் அதே போன்ற எண்ணம் கொண்ட நாடுகளுடனான அதன் உறவுகளை கட்டுப்படுத்தி / சுருக்கி பாகிஸ்தான், வட கொரியா மற்றும் ஈரான் போன்ற எப்போதும் பிரியாத நண்பர்களுடன் மட்டும் இணைந்திருக்க முடியாது. மேலும். சீனாவுடன் நல்ல புரிதலுடன் இருக்கும் ரஷ்யா கூட, ​​சீனாவை மையமாகக் கொண்ட உலகமாக்க முனையும் ஒரு இளைய கூட்டாளியின் நிலையை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

மேலும் தொற்றுநோய்க்கு பிந்தைய நிலையான உலகளாவிய சூழல் நடைமுறைக்கு வந்து ​​உலகளாவிய பொருளாதார மீட்சி காணப்படும்போது, ​​நியாயமான தெளிவான செயல்பாட்டு நோக்கங்களைக் கொண்ட ஒருமித்த நீண்ட கால க்வாட் திட்டம் உருவாக வேண்டும். தொடர்ச்சியான முழுவதும் பயனுள்ள கடற்படைத் திறனைப் பெறுவதும் பராமரிப்பதும் செலவுமிக்க முன்மொழிவாகும், மேலும் ஒவ்வொரு நாடும் இந்த புதிய கடல்சார் கூட்டுறவில் எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பது குறித்து அதன் சொந்த செலவு-பயன் பகுப்பாய்விற்கு வர வேண்டும்.

க்வாட் அமைப்பு கடற்படை / கடல்சார் களத்தில் ஒத்துழைப்பு மற்றும் குறுகிய இடைவெளியில் பலவிதமான முன்னுரிமைகளை வழங்குகிறது, மேலும் இந்தோனேசியா மற்றும் பிற ஆசியான் நாடுகளும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று நம்பலாம். சர்வதேச சட்டம் மற்றும் வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப உலகளாவிய பொதுநலன்களை நிர்வகிக்கும் திட்டமிடப்பட்ட குறிக்கோள் குறித்து பிரதமர் மோடி இந்த அமைப்பின் பல்வேறு சர்வதேச கூட்டங்களில் பெரும்பாலும் பேசி வருகிறார்.

முரண்பாடாக, அமெரிக்கா ஐ.நா. கடல் சட்டத்திற்கு (UNCLOS) கையொப்பமிடவில்லை என்றாலும் இந்த கொள்கையை ஆதரித்து ஒப்பந்தத்தின் உணர்வை பின்பற்றுகிறது. இதற்கு மாறாக, சீனா UNCLOS-ல் கையெழுத்திட்டது, ஆனால் தென் சீனக் கடல் தொடர்பாக இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிராகரிக்கிறது எனவே சீனாவின் இணக்கத்தை உறுதி செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கும், மேலும் இது திறமையான ராஜதந்திரம் மற்றும் கடற்படையின் சமாதானப்படுத்தும் திறமை ஆகியவற்றின் கலவையாகும்.

மேலும் க்வாட் உடன் இணைந்திருப்பது நீண்ட கால சவாலாகும், மேலும் இது மோடி அறிவித்த சாகர் - கடல்சார் களத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஒத்திருக்கும்.

இதையும் படிங்க: நிலையான பொருளாதார வளர்ச்சியை முடக்கிய கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.