ETV Bharat / bharat

கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் முயற்சிகள்...! - HCQ drug India

கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் முயற்சிகள் விவரங்கள் குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா விரிவாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

HCQ
HCQ
author img

By

Published : Apr 16, 2020, 8:47 PM IST

கரோனா பாதிப்புக் காரணமாக ஏற்ற மருந்துகள் ஏற்றுமதிக்கானக் கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்பவுள்ளது. 21 நாடுகளுக்கு வர்த்தக பரிவர்த்தனை முறையிலும், மீதமுள்ள சிறிய நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலும் இந்த சேவையை இந்தியா மேற்கொள்கிறது.

மருந்து ஏற்றுமதி செய்யப்படும் முதல் 13 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஆப்கானிஸ்தான், நேப்பாள் ஆகிய நாடுகள் உள்ளன. அத்துடன் இரண்டாம் மற்றும் மூன்றம் கட்ட நாடுகளின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தயார் செய்துள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகமும் அடக்கம்.

’’மற்ற நாடுகளின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து வருகிறோம். தேவை மற்றம் காலச்சூழலுக்கு ஏற்ப நாடு முழுவதும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்க பி0ரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது'’ என வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் மருத்துகளின் சப்ளை, அதன் பரிவர்த்தனை ஆகியவை சரியான முறையில் தொடர்பு கொள்ளப்பட்டு விமானங்கள் மூலம் சரியான நேரத்தில் அனுப்பப்படுகிறது. அதேவேளை இந்தியாவின் தேவைக்கேற்ப துரித நடவடிக்கைகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவுக்கு தேவையான சுமார் 6.5 லட்சம் கரோனா பரிசோதனை கருவிகள் நேற்று விரைவு பேச்சுவார்த்தை மூலம் சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவையனைத்தும் இறக்குமதி தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவச் சந்தைக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

கரோனா பரிசோதனை கருவிகளை மேலும் கொள்முதல் செய்ய தென் கொரியா, பிரிட்டன், மலேசியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையுடன் சேர்த்து பாதுகாப்பு உபகரணங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வெளியுறவுத்துறை தொடர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வெளிநாடுகளில் வாழும் 3 ஆயிரத்து 336 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பாதுகாப்பு காரணம் கருதி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் சிக்கித் தவித்த 48 நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரம் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 186 பேர் இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி வாகா வழியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேர குறைத்தீர்ப்பு சேவையை மேற்கொண்டு வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுவரை 5000 தொலைபேசி அழைப்புகள், 2000 குறைத்தீர்ப்பு கோரிக்கைகள், 18,000 மின்னஞ்சல்கள ஆகியவற்றை கையாண்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இம்மாத இறுதிக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில் சந்திக்கவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.