மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்து 5 சதவீதமாக தற்போது உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை மொத்த உள்நாட்டு உற்பத்தி கண்டுள்ளது. இந்தியா பொருளாதாரம், உற்பத்தித் துறையின் சரிவு, விவசாய மந்தநிலை, அயல்நாட்டு முதலீடுகள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் படிப்படியாக குறைந்து இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இருந்தும் மின்சாரம், எரிவாயு, நீர் மேலாண்மை ஆகிய உற்பத்தியில், கடந்த காலாண்டைக் காட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.