ஜம்முவிலுள்ள கில்கிட், பலூசிஸ்தான் பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளாக உள்ளன. இந்த இடங்களிலுள்ள பௌத்த பாரம்பரிய இடங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் அழிக்கப்படுவதாக வெளிவந்துள்ள தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவஸ்தா, "பண்டைய நாகரிக, பண்பாடுகளை எடுத்துச் சொல்லக்கூடிய இடங்கள் திட்டமிட்டும், காழ்ப்புணர்ச்சியுடனும் அழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்தியா எல்லைக்குள்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பாரம்பரிய இந்திய பௌத்த அடையாளங்கள் அழிக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறேம்.
மத்திய அரசு உடனடியாக அந்த இடங்களுக்கு தொல்பொருள் ஆய்வாளர்களை அனுப்பி அங்கு சேதப்படுத்தப்பட்டுள்ள இடங்களை சீரமைக்க வேண்டும். தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து உடனடியாகப் பாகிஸ்தான் வெளியேற வேண்டும்" என்றார்.