இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு மலேசிய பிரதமர் மஹதிர் முகமது மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு தொந்தரவாகவே இருக்கிறார் என்றார்.
![Prime Minister Narendra Modi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4465320_pmmodi.jpg)
சமீபத்தில் கூட மலேசிய இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஜாகிர் நாயக் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் நாங்களும் இவரை எங்கேயாவது அனுப்பப்பார்க்கிறோம், ஆனால் அவரை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கூறியுள்ளார்.
![Malaysia PM Mahathir Mohamad](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4465320_pmmodi123.jpg)
முன்னதாக மத வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்துவருவதாகக் கூறி ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்திருந்தது.