டெல்லி: நாட்டின் கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 45 ஆயிரத்து 903 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 490 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்ட 85 லட்சத்து 53 ஆயிரத்து 657 பேரில் 79 லட்சத்து 17 ஆயிரத்து 373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 673 பேர் மருத்துவமனைகள், வீடுகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை 92.56 விழுக்காடாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விழுக்காடு 1.48 விழுக்காடாகவும் உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல்படி, நேற்று ஒருநாள் மட்டும் எட்டு லட்சத்து 35 ஆயிரத்து 401 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை 11 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 192 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒரு 17 லட்சத்து 19 ஆயிரத்து 858 பாதிப்புகள் மற்றும் 45 ஆயிரத்து 240 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேச மாநிலங்களும் உள்ளன.
உலக அளவிலான கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவலாக மாறிய ட்ரம்பின் தேர்தல் நைட் பார்ட்டி!