ETV Bharat / bharat

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேருக்கு கரோனா - கரோனா பாதிப்பு எண்ணிக்கை

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 75 ஆயிரத்து 760 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியது.

india corona update
india corona update
author img

By

Published : Aug 27, 2020, 3:49 PM IST

உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பின்வருமாறு:

கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 75 ஆயிரத்து 760 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 234ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆக. 26) ஒரே நாளில் 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 472ஆக அதிகரித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரத்து 771ஆக உயர்ந்துள்ளது. ஏழு லட்சத்து 25 ஆயிரத்து 991 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.24 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் பதிவாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் மூன்று கோடியே 85 லட்சத்து 76 ஆயிரத்து 510 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆக. 26) ஒரே நாளில் ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்து 998 மாதிரிகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா பாதிப்பில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 14 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஏழு லட்சத்து 18 ஆயிரத்து 711ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 958 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 261ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையானது ஆறாயிரத்து 839ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மூன்றாவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

உலக அளவில் 2.43 கோடி பேர் நோய்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 8.29 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசிலும், அடுத்தபடியாக இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் குறைந்த அளவே இறப்பு விகிதம் இருந்தாலும், கரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் பெருகிவரும் போலி சானிடைசர் வர்த்தகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.