ETV Bharat / bharat

கிழக்கு லடாக்கில் ராணுவத்தை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புதல்! - கிழக்கு லடாக்கில் ராணுவம்

டெல்லி: இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள், நெறிமுறைகளின் அடிப்படையில் எல்லை ராணுவத்தை திரும்பப்பெற இந்தியா - சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

india-china-agreed-to-sincerely-work-towards-complete-disengagement-of-the-troops-along-lac-at-wmcc-meet-says-mea

author img

By

Published : Aug 21, 2020, 1:30 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், இந்திய-சீன எல்லை விவகாரத்திற்கான ஆலோசனை, ஒருங்கிணைக்கும் குழுவின் கூட்டம் நேற்று (ஆக. 20) நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா சார்பாக வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியா இணைச் செயலாளரும், சீனாவின் சார்பில் எல்லை மற்றும் பெருங்கடல் துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரின் தலைமையில் அலுவலர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இருநாட்டு உறவுகளின் அனைத்து வளர்ச்சிக்கும் எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பது அவசியம் என்பதால் இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் உடன்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியிறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராஜ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ''இந்திய-சீன நாடுகளுக்கு இடையே எல்லையில் நிலவிவரும் சூழல் குறித்து இருதரப்பு அலுவலர்கள் தங்களது ஆழமான கருத்துகளை இந்தக் கூட்டத்தில் பரிமாறிக் கொண்டனர்.

இருநாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள ராணுவத்தை திரும்பப்பெற இருதரப்பும் உண்மையாகச் செயல்படுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - ஆசியாவில் அரசியல் மாறுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.