ETV Bharat / bharat

புதுச்சேரியில் களைகட்டிய சுதந்திர தின விழா..! - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: இந்திராகாந்தி மைதானத்தில் இன்று நடந்த 73ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி
author img

By

Published : Aug 15, 2019, 7:24 PM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் புதுச்சேரி இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலைமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்பு, சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் முதலமைச்சர் நாராயணசாமி

Intro:புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை....
Body:புதுச்சேரி 15-08-19
புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை....

நாட்டின் 73வது சுதந்திர தினவிழா புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. புதுச்சேரி முதலைமைச்சர் நாராயணசாமி நான்காவது முறையாக தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.7,416 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. என்றும் மத்திய அரசு மாநிலத்திற்கு அளித்து வந்த கொடை வெகுவாக குறைத்து விட்டதாகவும் மேலும் ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப்பெறுவது மிகப்பெரிய சவலாக உருவெடுத்து வருகின்றது. இருப்பினும் இந்த பிரச்சினைகளை தீவிரமாக எதிர்கொண்டு அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி சுதந்திரதின உரையாற்றினார். சுதந்திர தினவிழாவையொட்டி விழா நடைபெறும் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.Conclusion:புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை....
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.