பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் இரு நாட்டு உறவின் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுபடுத்தவற்காக உறுதி பூண்டுள்ளனர். இருவருக்கும் பொருந்திப்போகும் தேதியில் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை விரைவில் நடத்தவுள்ளனர். கரோனா பாதிப்பை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொண்டு, பிராந்திய மேம்பாட்டை நோக்கி பயணிப்பதே இலக்கு. இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் உச்சி மாநாடு, பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க இரு நாட்டு தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புடினுக்கு பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துக்கொண்டார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிறந்தநாள் விழா - கரோனா பரப்பிய காவலர் பணியிடை நீக்கம்!