திருவனந்தபுரம் (கேரளா): கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மாநில அரசு கையாண்ட முறைகளை இந்தியாவின் பிற மாநிலங்களும், உலக நாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணரும், இந்திய மருத்துவக் கழகத்தின் செயற்குழு உறுப்பினருமான மருத்துவர் ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு மருத்துவர் ஸ்ரீஜித் குமார் அளித்த சிறப்பு பேட்டியில், கரோனா நோய்க் கிருமித் தொற்றுக்கு எதிரான கேரள அரசின் செயல்பாடுகள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது.
சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!
ஒரு வியக்கத்தக்க உண்மை என்னவென்றால், நாட்டின் கோவிட்-19 தொற்றின் முதல்நிலை காலகட்டத்தில், பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளாவின் இரட்டிப்பு விகிதம் சராசரியாக 72 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே, இந்தியாவில் சராசரி இரட்டிப்பு வீதம் 7.5 நாட்களாகும்.
மேலும், கேரள மாநிலம் சரியான வழிமுறைகளை பின்பற்றியதாகவும், புதிதாக அவர்கள் எதையும் செய்துவிடவில்லை என மருத்துவர் கூறியுள்ளார். உலக சுகாதார மையமும், மத்திய சுகாதார அமைச்சகமும் கொடுத்த நெறிமுறைகளை மட்டுமே கேரள அரசு சரியாக பின்பற்றியது என்று தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தொலைநிலை கற்றல் தளத்தை அமைக்கிறது யுனிசெப்!
எனவே மக்கள் அனைவரும் தங்களையும், தங்கள் சுற்றுபுறத்தையும், அதிகம் பயபடுத்தும் கருவிகளையும் சுகாதாரமாக வைத்திருக்கவேண்டும் என்று அறிவுரை கூறும் மருத்துவர், சமூக இடைவெளியை அவசியம் பின்பற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.