ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப்போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை உதவி - லியுடெனன்ட் குமுதினி தியாகி மற்றும் உதவி லியுடெனன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள்.
முன்னதாக இப்பணிகளில் பெண்களை பணியமர்த்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் தற்போது பணியமர்த்தப்பட்டிருப்பது போர்க்கப்பல்களில் முதன்மைப் பணிகளில் பெண்கள் மேலும் பங்கு வகிக்க தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடற்படையின் 17 அலுவலர்கள் கொண்ட குழுவில் உள்ளனர். இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையின் கடல்சார் மறுமலர்ச்சி, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களில் இந்த அலுவலர்கள் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அஸ்ஸாமில் தடுப்புக்காவலில் இருந்த 350 பேர் பிணையில் விடுவிப்பு - மத்திய அரசு