ETV Bharat / bharat

புதுச்சேரியில் இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

நிவர் புயல் புதுச்சேரி அருகே அதிகாலையில் கரையைக் கடந்ததால் இரவெல்லாம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, மரங்கள் சரிந்துள்ளதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

impact-on-normal
impact-on-normal
author img

By

Published : Nov 26, 2020, 11:08 AM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவில் நிவர் புயல் கரையைக் கடந்தது. அந்த நேரத்தில் கனமழையும் கொட்டியது. தற்பொழுதும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் நகர சாலைகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. புயல் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்திலும், மரங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக புதுச்சேரி முதல்வர் வீட்டினை சுற்றியும் மழை நீர் சுழ்ந்துள்ளது.புதுச்சேரி, இந்திரா காந்தி சதுக்கம், புஸ்சி வீதி, வள்ளலார் சாலை, புல்வார்டு பகுதிகள், காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. புதுச்சேரி மன்னாடிப்பட்டு குமாரப்பாளையத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி மேட்டுப்பாளையம் நகரப்பகுதி அரசு மருத்துவமனை அருகே, பல்வேறு பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, மழை நீர் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

இதையும் படிங்க: ஜனநாயகத்திற்குட்பட்டு மக்கள் அதை காப்பாற்ற வேண்டும் - புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.