உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தும், மூன்றரை லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் உலக நாடுகள் இம்யூனிட்டி பாஸ்போர்ட் என்னும் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்க முடிவுசெய்துள்ளது.
இம்யூனிட்டி பாஸ்போர்ட் என்றால் என்ன?
ஒருவருக்கு கோவிட்-19 அல்லது சார்ஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், அவர்கள் உடம்பில் ஆன்டிபாடி இருப்பதால் மீண்டும் அதுபோன்ற பெருந்தொற்றுகள் ஏற்படாது என்று கூறி அந்த நபர்களுக்கு வழங்கப்படுவதுதான் 'இம்யூனிட்டி பாஸ்போர்ட்'. இதை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம். மேலும் தடையின்றி அவர்கள் பணிகளை தொடர முடியும்.
இம்யூனிட்டி பாஸ்போர்டுக்கு ஒப்புதல்
அதன்படி அமெரிக்கா, பிரட்டன், இத்தாலி, ஜெர்மனி, சைல் ஆகிய நாடுகள் இதனை முன்மொழிந்துள்ளன.
மருத்துவ ஆய்வாளர்கள் எதிர்ப்பு
ஒருவருக்கு கரோனா தொற்று வந்தால் அவருக்கு மீண்டும் அத்தொற்று வராது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்ததை மேற்கோள் காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த தேசிய தொற்று நோய் இயக்குநர் மருத்துவர், மனோ. சீனா, தென் கொரியாவில் கரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் பலருக்கும் இந்த நோய் மீண்டும் வந்ததை குறிப்பிட்டார்.
இந்த இம்யூனிட்டி பாஸ்போர்ட் வாங்குவதற்காக மக்கள் என்ன தொற்றுவருவதற்கு காத்திருந்து அதன் பின் இதனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா? என்று கேள்வியெழுப்பும் மருத்துவ ஆய்வாளர்கள், இது மக்கள் மத்தியில் பெரும் பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, ஆன்டிபாடி அனைவரின் உடல்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும் என்று கூறமுடியாது. மேலும், இதன் பிறகு நோய்த் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும் என்று உறுதியளிக்கவும் முடியாது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முசாபர்பூர் பெண் உயிரிழப்புக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்