இதுகுறித்து ஜல்பாய்குரி சைன்ஸ் நேச்சர் கிளப்பின் செயலாளரும், இயற்கை ஆர்வலருமான ராஜா ரவுட் கூறுகையில், "பல ஆண்டுகளாக ஜல்பாய்குரி மாவட்டத்தின் மாய்நாகூரில் உள்ள பர்நிஷ் பகுதி வழியாக ஓடிய டீஸ்டா நதி, ஒரு கட்டத்தில் வங்க தேசத்தை நோக்கிப் பாய்ந்தது.
ராங்தாமாலி பகுதியில் டீஸ்டா நதிக் கரையில் நடக்கும் மணல் மற்றும் கல் கொள்ளையே இதற்கு காரணம். தற்போது இந்த நதி ஜல்பாய்குரி நகரில் உள்ள சாரத பல்லி பகுதி வழியாகப் பாய்ந்தோடுகிறது.
அதேபோல, அலிபுர்துவார் மாவட்டம் வழியாகச் செல்லும் சில்தோஷா நதி அடிக்கடி தடம்மாறி ஓடுகிறது. இதற்கும் மணல் கொள்ளையே காரணம். இம்மாற்றங்கள் காரணமாக ஜல்தாபாரா பகுதியில் உள்ள மரங்கள், காடுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மரங்கள் நாசமாவதுண்டு.
அலிபுர்துவார் மாவட்டம் வழியாகச் செல்லும் கல்ஜானி, ரய்டாக் ஆகிய மேலும் இரு நதிகள் தடம் புரண்டு பக்ஸா புலிகள் காப்பகம் நோக்கிப் பாய்கிறது. இது அங்குள்ள வனவிலங்குகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுதலாக அமைந்துள்ளது.
நதிப் படுகைகளில் மணல் கொள்ளை நடப்பதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் சட்டங்களை விதித்துள்ள போதிலும் அது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது.
ஜஸ்தகா, தியானா ஆகிய நதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் ஜெய்கோன், பிர்பாலா, மதாரிஹட் அதனை சற்றியுள்ள அலிபுர்துவார் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன" எனக் கூறினார்.
இதையும் படிங்க : புலியுடன் இரவு முழுவதும் தூங்கிய மனநலம் பாதிக்கப்பட்டவரால் பரபரப்பு