ஃபர்னிச்சர் நிறுவனங்களின் டான் ஆக இருந்து வரும் ஐக்கியா நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நாட்டிலேயே முதன்முறையாக தனது புதிய உணவக்கதை ஹைதராபாத்தில் தொடங்கியது.
சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கியா ஹோட்டல், தொடங்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.
ஹோட்டலில் தயார் செய்யப்பட்ட வெஜ் பிரியாணியில் புழு இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து ஐக்கியா உணவகத்திற்கு ரூ. 11, 500 அபராதம் விதிக்கப்பட்டது. பிரபல உணவகத்தில் இதுபோன்ற புகார் எழுந்தது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐக்கியா, தனது மெனுகார்டில் இருந்து வெஜ் பிரியாணியை நீக்கியது. இதையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெஜ் பிரியாணியை உணவுப் பட்டியலில் இணைத்துள்ளது. முன்பு இருந்தது போலவே ரூ. 99-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேபோல் ஐக்கியா உணவகத்திலிருந்து வாங்கிய கேக்கில் கரப்பான் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.