ETV Bharat / bharat

20 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிவிக்கும் கரோனா பரிசோதனை கருவி: ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைப்பு

ஹைதராபாத்: கரோனா பாதிப்பு பரிசோதனை முடிவுகளை 20 நிமிடங்களில் தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கருவியை ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது.

IIT Hyderabad
IIT Hyderabad
author img

By

Published : Jun 17, 2020, 11:10 AM IST

கரோனா பாதிப்பு பரிசோதனைக்கு தற்போது ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனை குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், இந்தப் பரிசோதனைக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ள நிலையில், புதிய வகை பரிசோதனை கருவிகளை வடிவமைக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அதன்படி, ஹைதராபாத் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்த் சிங், பேராசிரியர் சுரியத்சனா திரிபாதி, நான்காமாண்டு மாணவி சுப்ரஜா ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கரோனா பரிசோதனைக் கருவியை வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கருவி 20 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிடும் திறன்கொண்டது. தற்போதைய சூழலில் பரிசோதனை மேற்கொள்ள ரூ.600 செலவாகும் எனவும், அதிகளவிலான உற்பத்தி செய்யப்படும்போது இதன் விலை ரூ.350ஆக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை கருவியை அதிகளவில் உற்பத்திசெய்ய ஐ.சி.எம்.ஆர். அமைப்பிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஐ.டி. ஹைதராபாத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்ப்போம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.