ETV Bharat / bharat

இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட டெல்லி ஐஐடி! - ஐஐடி டெல்லி

டெல்லி: இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் டெல்லி ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

IIT
IIT
author img

By

Published : Oct 30, 2020, 5:30 PM IST

Updated : Oct 31, 2020, 6:17 AM IST

இஸ்ரேல் நாட்டில் இயங்கிவரும் வெய்ஸ்மேன் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்துடன் டெல்லி ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 1934ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி உலகின் இரண்டாவது தலைசிறந்த கல்லூரியாகத் திகழ்ந்துவருகிறது.

ஆராய்ச்சி, வொர்க் ஷாப், கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது‌.

இது குறித்து வெய்ஸ்மேன் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சிவ் ரீச் கூறுகையில், “டெல்லி ஐஐடி யுடன் ஒருங்கிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகுக்கு சவால்விடுக்கும் பல்வேறு துறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து செயல்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஆராய்ச்சிப் படிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிப்போம்” என்றார்.

Last Updated : Oct 31, 2020, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.