பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களுடன் ராகுல் காந்தி உரையாடல் நடத்திவருகிறார். கரோனா சூழல், பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டுவருகிறார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனஸூடன் ராகுல் மேற்கொண்ட உரையாடலின்போது, நாட்டை மறுகட்டமைக்கும் நோக்கிலான புதிய கற்பனை திறனுக்கு கரோனா வாய்ப்பளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "புதிய கற்பனை திறனுடன் நீங்கள் கரோனாவிலிருந்து வெளியே வரவில்லை எனில், தனிப்பட்ட நபராகவும் நாடாகும் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் பிரச்னைக்குரியது என்பதை கரோனா நிரூபணம் செய்துள்ளது.
புதிய கற்பனை திறனுடன் அனைத்தையும் புதியதாக தொடங்க வேண்டும். அரசு போல் ஒரே அடியாக தாவி விட முடியாது. குறைந்தபட்சமாக அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். மற்றவை தானாக நடைபெறும்.
ஏதோ ஒன்று தவறாக சென்றுள்ளது என இளம் தலைமுறையினர் நினைக்கின்றனர். பணக்காரர், ஏழைக்கிடையே வானளாவிய அளவில் வித்தியாசம் அதிகரித்துள்ளது. அது மக்களை பாதிக்கிறது. எனவே, புதிய சூழல் எப்படி இருக்கும் என்பதை எதிர்க்கட்சியாக செயல்படுவதன் மூலம் காண்கிறோம். அதற்கு புதிய கற்பனை திறன் தேவை" என்றார்.
இதையும் படிங்க: 'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'