வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று பேசிய அவர், "கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டது போல் நீங்கள் அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும். அதுவே ஒரே வழி.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தாங்கள் பணிபுரிந்த நகரங்களிலிருந்து தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப முயல்கின்றனர். நான் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நீங்கள் எங்கு தங்கியிருந்தாலும் அதே இடத்தில் இருங்கள்.
அமெரிக்கா, இத்தாலி போன்ற சில வளர்ந்த நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக, இந்தியா இன்னும் அந்த நிலைமைக்குச் செல்லவில்லை. ஆனால், ஒரே இடத்தில் மக்கள் கூடுவது பேரபாயத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் பள்ளிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மைதானங்களிலும் தொழிளாலர்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது தினமும் நான்கு லட்சம் பேருக்கு இலவச உணவை வழங்குகிறோம். கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'வாய்ஸ் காலை இலவசமாக்குங்கள்' - பிரியங்கா காந்தி கோரிக்கை!