கர்நாடகாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், "வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த கர்நாடாக மக்கள் தற்போது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
மக்களின் நலன் கருதி வெளிமாநிலங்களிலிருந்து வரும் அனைவரும் கண்டிப்பாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு, வேறு மாநிலங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும், கர்நாடாகவில் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
வேறு மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கர்நாடகாவுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. அவர்கள் உயிரிழந்த இடத்திலே, அவர்களின் இறுதிச்சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மும்பையில் கரோனா நோயாளி தற்கொலை!