கரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று மக்களிடம் பேசினார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில், ''கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருபுறம் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்துவருகிறது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் மறுபுறம் ஆயிரக்கணக்கான எம்.பி., எம்எல்ஏ-க்களை நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அனுமதிக்கிறோம். இது ஜனநாயக மாண்பாக தெரியவில்லை.
கரோனா வைரஸால் மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு முதலமைச்சர் கமல்நாத் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இப்போது நாடாளுமன்ற கூட்டங்கள் நடந்துவருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதன் காரணமாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அனுமதிக்கப்பட்டு வருகிறது'' என விமர்சனம் செய்துள்ளது.
இதையும் படிங்க: மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு - பிரதமர் மோடி வேண்டுகோள்!