ETV Bharat / bharat

'கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்' - corona current news

புதுச்சேரி: யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா அறிவுறுத்தினார்.

corona-signs-go-to-hospital
corona-signs-go-to-hospital
author img

By

Published : May 16, 2020, 3:34 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 12 பேர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தகுந்த இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்காத காரணத்தினால்தான் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவுகிறது. எனவே மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "ஆரோக்கிய சேது செயலியை மக்கள் அவசியம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுவரை 5,312 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 5,162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை" என்றார்.

எவரேனும் கரோனா அறிகுறிகளுடன் இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ’சிக்கனத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை ஆளுநர் மாளிகை பின்பற்றும்’ - கிரண்பேடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.