545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் மத்திய அரசு, இரு ஆங்கிலோ இந்தியர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற்றுவருகிறது. 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்த நியமனத்தை செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவந்தது. இந்நிலையில், ஆங்கிலோ இந்தியர்கள் வளர்ச்சி அடைந்துவிட்டனர். எனவே, அவர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமூக நலத்துறை அமைச்சர் தாவார் சந்த் கெலாட் அடங்கிய மத்திய அமைச்சரவைக் குழு முடிவெடுத்தது.
இந்திய அரசியலைமைப்பு சட்டம் அறிமுகமானதிலிருந்தே இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவருகிறது. பட்டியலினத்தவருக்கு 87 இடங்களும் பழங்குடியினருக்கு 47 இடங்களும் இட ஒதுக்கீடு மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இதன்மூலம், ஆங்கிலோ இந்தியர்களை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மெழுகுவர்த்தி ஏற்றி நீதி கேட்ட பொதுமக்கள்!