காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வாட்டர்காம் பகுதியிலுள்ள முக்கிய சாலையில் இருந்து ஐ.இ.டி. வகையைச் சேர்ந்த பயங்கர வெடிகுண்டை ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவினரும் உள்ளூர் காவல் துறையினரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில் "ஐ.இ.டி வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதும், சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் அந்த ஐ.இ.டி. வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்கச் செய்தனர்.
இந்தச் சாலையை முக்கிய நபர்களும் பாதுகாப்புப் படையினரும் பயன்படுத்துவார்கள் என்பதை அறிந்து, திட்டமிட்டு அவர்களைக் குறிவைத்து இங்கு இந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வைத்துள்ளனர்" என்றார்.
பொதுவாக முக்கிய நபர்கள் இந்த சாலையை பயன்படுத்துவதற்கு முன்னர் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் இந்தச் சாலைகளை சோதனையிடுவது வழக்கம். அதுபோல நடத்தப்பட்ட சோதனையில்தான் இப்போது இந்த வெடிகுண்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சாலையில் ஒரே வாரத்தில் இரண்டு பயங்கர வெடிகுண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு