கேரளாவின் இடுக்கி மாவட்டம் மறையூர் விவசாயிகள் பாரம்பரிய முறையில் கையால் தயாரிக்கும் வெல்லம் எப்போதும் தனித்துவமானாது. இதனிடையே, மறையூர் வெல்லம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் போலியான வெல்லம் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், மறையூர் வெல்லத்தின் புகழும், அதன் விற்பனையும் சரிவடைந்தது.
இந்நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவர மறையூர் விவசாயிகள், தாங்கள் தயாரிக்கும் வெல்லத்திற்கு புவிசார் குறீயிடு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இறுதியில், விவசாயிகள் வைத்த கோரிக்கைப்படி, மறையூர் வெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாரம்பரிய முறையில் வெல்லம் தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு மறையூர் கோவில்கடாவில் நடைபெற்றது.
இதனை, விவாசாயத்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் தொடங்கிவைத்தார். புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம், மறையூர் வெல்லத்தின் தரமும் அதன் சுவையும் தற்போது நேரடியாக பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ளது. இதனால், விவசாயிகள் தங்களுக்கான லாபத்தை பெறவுள்ளனர்.