இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஆண்டுதேறும் ஐசிஎஸ்இ(ICSE) எனப்படும் 10ஆம் வகுப்பு தேர்வுகளையும்; ஐஎஸ்சி(ISC) எனப்படும் 12ஆம் வகுப்பு தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019-20ஆம் ஆண்டிற்கான பத்து (ஐசிஎஸ்இ) மற்றும் பன்னிரெண்டாம் (ஐஎஸ்சி) வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 10, வெள்ளிக்கிழமை நண்பகல் 3:00 மணிக்கு அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வின் முடிவுகளை கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர்களின் ஐடி, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி www.cisce.org அல்லது www.results.cisce.org தளத்திலிருந்து மாணவர்கள் தங்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
கோவிட்-19 பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் சிலவற்றை இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ரத்து செய்திருந்தது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மாணவர்களின் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களும், பிராஜெக்ட் மதிப்பெண்களும் கணக்கெடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பாடத்திட்ட சர்ச்சை:'கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்' - ரமேஷ் பொக்ரியால்