ETV Bharat / bharat

கோவிட்-19 பரிசோதனை கருவிகள் குறித்த வழிகாட்டுதலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டது!

author img

By

Published : May 14, 2020, 4:57 PM IST

டெல்லி : கோவிட்-19 பெருந்தொற்று நோய் கண்டறிதல் பரிசோதனை கருவிகளின் உற்பத்தியாளர்களை பட்டியலிட்டு, வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இன்று வெளியிட்டுள்ளது.

ICMR issues guidance on rapid antibody test kits for COVID-19, lists manufacturers
கோவிட்-19 பரிசோதனை கருவிகள் குறித்த வழிகாட்டுதலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டது!

நாட்டின் உச்ச சுகாதார ஆராய்ச்சி அமைப்பான ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய்த்தொற்று கண்டறியும் சோதனை கருவிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) சரிபார்க்கப்பட்டது. அப்போது, குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக், ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய இரு சீன நிறுவனங்கள் உற்பத்தி செய்த ரேபிட் கிட்கள், சோதனையில் மாறுபாட்ட முடிவுகளை காட்டியது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யும் உரிமங்களை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) ரத்து செய்தன. எனவே, இதுபோன்ற சோதனை கருவிகளை கண்காணிப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது.

தொற்றுநோய்க்குப் பிறகு பல வாரங்கள் சோதனை நேர்மறையாக உள்ளது. நேர்மறையான சோதனை SARS-CoV-2 வெளிப்படுவதைக் குறிக்கிறது, எதிர்மறை சோதனை முடிவு கோவிட்-19 நோய்த்தொற்றை நிராகரிக்காது.

இன்றுவரை, புனே ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளின் முடிவில் 42 வகையான கிட்கள் சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன. மேற்கொண்ட ஆய்வில் திருப்திகரமாக இருக்கும் கிட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவிட்-19 பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு, வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கருவிகள் உள்ளன.

நிறுவனங்களின் பட்டியலில் அபோட் லேபரட்டரீஸ் ஜைடஸ் காடில்லா, எச்.எல்.எல் லைஃப் கேர் லிமிடெட், இந்தியா மற்றும் சிடாக் லைஃப் கேர் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளதாக அறிய முடிகிறது.

ஐ.சி.எம்.ஆர் பட்டியலிடப்பட்ட கருவிகளின் நிலைத்தன்மையின் பொறுப்பு உற்பத்தியாளரிடம் மட்டுமே உள்ளது என்றும் அதற்கான பொறுப்பை அந்நிறுவனங்கள் ஏற்கும் என்றும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

முன்னதாக, கோவிட்-19 பதிப்பைக் கண்டறிய பயன்படுத்தப்பட்ட சீனாவின் பரிசோதனைக் கருவிகள் இறக்குமதி செய்ததில், "ஒரு ரூபாயை கூட இழக்கவில்லை" என்று மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி! சிதம்பர ரகசியத்தை இன்று உடைக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.