இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நோய்ப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 99 புதிய கரோனா பரிசோதனை மையங்களுக்கு ஒப்புதல் வழங்க ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அத்துடன் பாதிப்பு அதிகமுள்ளப் பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைந்து பரிசோதிக்கும் விதமாக, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் இலக்கு நிர்ணையித்துள்ளது.
தற்போதைய சூழலில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளும் நிலையில், அதை மும்மடங்காக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்