ETV Bharat / bharat

30 நிமிடங்களில் கரோனா சோதனை முடிவு'... தென்கொரியாவின் ஆன்டிஜென் கிட்டை அங்கீகரித்த ஐசிஎம்ஆர்! - கரோனா சோதனைக்கு ஆண்டிஜன் கிட்

டெல்லி: கரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய தென்கொரியாவின் ஆன்டிஜென் கிட் சோதனை முறையை மருத்துவர்கள் பயன்படுத்த ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

antigen
antigen
author img

By

Published : Jun 16, 2020, 2:38 AM IST

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கரோனா தொற்றை கண்டறிய பல மணி நேரங்கள் ஆவதால், பலரின் சோதனை முடிவுகள் மருத்துவமனை லேபில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கரோனா வைரஸை கண்டறிய, தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட ஆன்டிஜென் கிட்டை உபயோகிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூறுகையில், " ஆன்டிஜென் கிட் பயன்படுத்தும் கரோனா சோதனையில் 30 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். அதில், தொற்று பாசிட்டிவ் வந்தால் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒரு வேளை நெகடிவ் வந்தால் மட்டும் RT-PCR சோதனை மீண்டும் செய்யப்படும்.

ஆன்டிஜென் கிட் சோதனை முடிவில் pcr சோதனைபோல் லேப் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மக்களின் மாதிரிகளை எடுத்த சில நேரத்திலேயே முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாசிட்டிவ் என்ற வந்தால் 99.3 முதல் 100 விழுக்காடுக்கு தொற்று பரவியிருப்பது உறுதி. தற்போது, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என தெரட்வித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.