ETV Bharat / bharat

அங்கித் சர்மா உடலில் 400 கத்திக் குத்து? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வதென்ன? - அங்கித் சர்மா உடற்கூறாய்வு அறிக்கை

டெல்லி: கிழக்கு டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட அங்கித் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரது உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

ankit sharma murder ankit sharma post-mortem report ankit sharma autopsy report injuries on ankit sharma's body IB officer Ankit Sharma stabbed 12 times அங்கித் சர்மா உடலில் 400 கத்திக் குத்து? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வதென்ன? அங்கித் சர்மா உடற்கூறாய்வு அறிக்கை டெல்லி கலவரம், டெல்லி வன்முறை, கிழக்கு டெல்லி

author img

By

Published : Mar 14, 2020, 2:46 PM IST

தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கடந்த மாதம் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் நடந்த கலவரத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வன்முறையின் போது உளவுப் பிரிவு அலுவலர் அங்கித் சர்மா என்பவரும் கொல்லப்பட்டார். அவரின் உடலில் 400 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அங்கித் சர்மாவின் உடற்கூறாய்வு அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில், “அவரது உடலில் 12 கத்தி குத்து காயங்கள் உள்பட 45 இடங்களில் காயங்கள் இருந்தன” என கூறப்பட்டுள்ளது. மேலும், “நுரையீரல் மற்றும் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவு, இறப்புக்கான காரணமாக இருந்தது. சில காயங்கள் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காயம் கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காயங்களும் மரணத்துக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.

அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தலையில் பெரிய காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக, அவரது மூளை பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கித் சர்மா கொலை தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம்: 712 எப்ஐஆர்... 200 அக்யூஸ்ட்கள் அரெஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.