மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராக சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் இருந்தபோது, சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும் மூத்தத் தலைவருமான சரத் பவார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தான் ஒருபோதும் வங்கிகளின் தலைவராக இருந்ததில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலம் கூட இல்லாத நிலையில், சரத் பவார் மீதான இந்த திடீர் வழக்கு அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!