ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரம்பியாரா நல்லா பகுதிக்கு செல்லும்போது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், லசிபுரா பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி முன்வைத்தனர், குறிப்பாக ரம்பி கால்வாயிலிருந்து மணல் மற்றும் கற்பாறைகளை எடுக்க உள்ளூர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இதனை நம்பியிருப்பதால், கால்வாயிலிருந்து மணல், மற்றும் கற்பாறைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மணல் கொள்ளை குறித்தும் அம்மக்கள் மெகபூபா முப்தியிடம் புகார் தெரிவித்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது” என்றார். மேலும், “காவலர்களால் ரம்பியாரா நல்லாவுக்கு வரும்போது தடுத்து நிறுத்தப்பட்டேன்.
சட்டவிரோத டெண்டர்கள் மூலம் மணல் எடுப்பது வெளியாள்களுக்கு அவுட்சோர்சிங் விடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மாநில பாஜக குறித்து கூறுகையில், “பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்துகின்றனர். பாஜகவினர் உரிமைகளை மீறுகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் அண்டை நாடுகளுக்கிடையேயான அமைதிப்பாலமாக மாற மாறவேண்டும்” - மெகபூபா முப்தி