ETV Bharat / bharat

எந்தக் கம்பெனியும் மூடவேண்டாம் - நிர்மலா சீதாராமன் - Nirmala Sitharaman on Telecom Crisis

டெல்லி: நாட்டின் பொருளாதார நலன் கருதி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

nirmala sitharaman
author img

By

Published : Nov 16, 2019, 12:30 PM IST

ட்ராய் (TRAI) எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2005ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதன்படி, திருத்தப்பட்ட மொத்த வருவாய் (adjusted gross revenue) அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி மொத்த வருவாயில் மொபைல் ஃபோன் விற்பனையில் ஈட்டப்படும் வருவாய், டிவிடெண்ட் எனப்படும் பங்கு ஆதாயம், வாடகை உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வருவாயையும் கணக்கில் கொண்டு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதனை எதிர்த்து பாரத் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குத் தரவேண்டிய ரூ.1.42 லட்சம் கோடி நிலுவைப் பணத்தைக் கட்ட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.

ஏற்கெனவே, ஜியோவின் வருகையால் நஷ்டத்தில் இயங்கிவரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடையவை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை வருவாய் குறித்து அறிவிப்பு வெளியிட்ட வோடஃபோன்-ஐடியா நிறுவனம், அரசின் உதவியில்லாமல் நிறுவனத்தை நடத்த முடியாது என கவலை தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பொருளாதார நலன் கருதி எந்த நிறுவனமும் அதன் செயல்பாட்டை நிறுத்த வேண்டாம்" என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : 'எர்டோகனின் தீவிர ரசிகன் நான்' - துருக்கி அதிபருக்கு ட்ரம்ப் புகழாரம்!

Intro:ભાવનગરમાં આવેલી સ્મૃતિ ઈરાનીએ સતેજ પર જાહેરમાં તલવાર ફેરવતા ચર્ચા જાગી Body:ભાવનગર સ્વામીનારાયણ સંસ્થાના ચાલી રહેલા કાર્યક્રમમાં મેહમાન બનેલા સ્મૃતિ ઈરાનીએ આજે સતેજ પર દીકરીઓ સાથે તલવાર ફેરવતા ચર્ચા જાગી હતી.સ્મૃતિ ઈરાનીએ તલવાર ફેરવતા અનેક પ્રશ્નો અને ચર્ચાઓએ જોર પકડ્યું હતું Conclusion:

એન્કર- ભાવનગર શહેરમાં સરદારનગર ખાતે આવેલી સ્વામીનારાયણ ગુરુકુળ સંસ્થાના ચાલી રહેલા કાર્યક્રમમાં આજે મંત્રી શ્રી સ્મૃતિ ઈરાની આવી પોહ્ચ્યા હતા.મેહમાન પડે આવેલા સ્મૃતિ ઈરાનીએ સતેજ પર દીકરીઓની તાલ્વારી બાઝી જોતા તેમને પણ હરખમાં આવીને તલવાર હાથમાં લીધી હતી.દીકરીઓએ તલવાર ફેરવતા શીખવ્યા બાદ સ્મૃતિ ઈરાનીએ જાહેરમાં તલવાર ફેરવી હતી જેનો વિડીયો પણ સોસીયલ મીડિયામાં જોરશોરથી વાયરલ થયો છે અને સ્મૃતિ ઈરાનીએ તલવાર ફેરવતા અનેક ચર્ચાઓ પણ જાગી હતી જો કે સ્મૃતિ ઈરાનીએ દીકરીઓને જોઇને તેમને પણ ઈચ્છા થતા તલવાર ફેરવી હોવાનું જણાવ્યું હતું
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.