நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினால் சன்மானம் வழங்கப்படும் என சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 45,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் செங்கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பின் தலைமை ஆலோசகர் குர்பட்வந்த் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், " 74ஆவது சுதந்திர தின விழாவின்போது, டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினால், 1,25,000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ., சுற்றளவுக்கு 2 ஆயிரம் வீரர்கள் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களிடையே அச்சத்தை ஊட்டும் வகையில், தடை செய்யப்பட்ட அமைப்பானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது என, பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைசிறந்த நாடாக இந்தியா திகழாததற்கு காரணம் இதுதான்!