மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா மாநிலம் முன்டுகோடு பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அக்குடும்பத்திலுள்ள எட்டு வயது சிறுவனுக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியானது. ஆனால், பெற்றோருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து அச்சிறுவனை தனிமைப்படுத்தி மருத்துவமனை அழைத்துச் செல்ல சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, தாயைவிட்டு வராத அச்சிறுவன் தனது தாயை கட்டிப்பிடித்துக்கொண்டு 'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது அம்மா தயவு செய்து என்னுடன் இரு' என்று கதறி அழத்தொடங்கியுள்ளான்.
ஆனால், அலுவலர்கள் அச்சிறுவனுக்கு தனிமனித பாதுகாப்பு உபகரணங்களை அணுவித்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். உபகரணங்களை அணிந்த பின்பும் தனது தாயைக் பிடித்துக் கொண்டு பாசப்போராட்டம் நடத்தியுள்ளான். இதனைப் பார்த்த அலுவலர்களின் இதயங்கள் நெருங்கின.
சிறிது நேரம் கழித்து அச்சிறுவனை சமாதானப்படுத்திய அலுவலர்கள், தாயுடன் வீடியோ அழைப்பில் பேச ஏற்பாடு செய்து தருகிறோம் எனக் கூறி அவரையும் அவரது தாயையும் கார்வார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!