இது தொடர்பாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வரும்போது ஏராளமான ஊடக நபர்கள் அண்மைக் காலங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளை சேகரிக்க சிவப்பு குறியீட்டு பகுதிகள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணத்தை மேற்கொள்ளும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவுக் கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தங்கள் பணிகளைச் செய்யும்போது முன்னெச்சரிக்கையாகத் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு பணியாற்ற வேண்டும்.
மேலும், ஊடக நிறுவனங்களின் நிர்வாகங்கள் தங்களது கள ஊழியர்களையும், அலுவலக ஊழியர்களையும் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மருத்துவர்களுடன் அமித் ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்!