ETV Bharat / bharat

'கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார்': முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார் என முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

karnataka cm yediyurappa
முதலமைச்சர் எடியூரப்பா
author img

By

Published : Jan 16, 2021, 10:29 PM IST

கர்நாடக மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிப் போடும் பணி இன்று(ஜனவரி 16) தொடங்கியது. அதன் ஒருபகுதியாக விக்டோரியா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிப் போடும் நிகழ்வை முதலமைச்சர் எடியூரப்பா இன்று (ஜன.16) தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'நிச்சயமாக நான் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வேன். தடுப்பூசி குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முழு மூச்சாக செயல்படுவேன். கரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி முழுத்தகவல்களையும் கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 243 கரோனா தடுப்பூசி மையங்களில் 100 பேர் இன்று தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும்.

சற்றுமுன் தான் நாகரத்னா என்ற பெண் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மருத்துவர்கள் உள்பட பலர் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். விஞ்ஞானிகளும், அரசாங்கமும் கரோனாவிலிருந்து மக்களை மீட்க பல முன்னெடுப்புகளை எடுத்ததன் விளைவாக கரோனாவிற்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்நாடக மாநிலம் சார்பில் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’என்றார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் நாராயணசாமி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.