காங்கிரஸ் கட்சியில் காலகாலமாக நேருவின் குடும்பமே தலைமை பொறுப்பில் இருந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவில் தொடங்கி இன்று ராகுல் காந்தி வரை அது தொடர்கிறது. இந்நிலையில், பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா அரசியல் கட்சியில் சேரப் போவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இதுகுறித்து அவர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இப்போது வரை அரசியலில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால், அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் எப்போது நான் அரசியலில் சேரந்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றனரோ அப்போது அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.