புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கான ஏப்ரல் மாதம் தாக்கல் செய்ய வேண்டிய 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தாமதமானதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
இதனை மறுக்கும் விதமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது, "உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைப்பதில் எவ்வித தாமதமும் செய்யப்படவில்லை. பட்ஜெட் மதிப்பீட்டை உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கும் கோப்பு மே 7ஆம் தேதி தான் துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு அரசால் சமர்ப்பிக்கப்பட்டது. நிதித்துறையிலிருந்து தேவையான விளக்கம் பெற்ற பிறகு மே 13ஆம் தேதியன்று பட்ஜெட் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது
இதன் பிறகு, உள்துறை அமைச்சகம் கோப்பில் சில சந்தேகத்தை எழுப்பியது. இதற்கான கோப்பு கடந்த ஜூன் 10ஆம் தேதி துணைநிலை ஆளுநரின் அலுவலகத்துக்கு அரசால் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில் உள்துறை அமைச்சகத்துக்கு அக்கோப்பு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: விரட்டியடித்த வனத்துறையினர்