ETV Bharat / bharat

‘நான் நலமுடன் உள்ளேன்’ - அமித் ஷா விளக்கம்

author img

By

Published : May 9, 2020, 4:58 PM IST

டெல்லி: தான் நலமுடன் உள்ளதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

I am healthy, not suffering from any disease, says Amit Shah

இந்தியாவில் கரோனா வைரசின் பாதிப்பு தென்படத் தொடங்கியதிலிருந்தே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதைத் தவிர்த்துவந்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அவர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், மத்திய அரசு அதனை மறைத்துவருவதாகவும் தெரிவித்துவந்தனர். இதன் காரணமாகவே, அமித் ஷா செய்தியாளர்களைக்கூட சந்திப்பதில்லை எனவும் பல வதந்திகள் பரப்பப்பட்டுவந்தன.

அமித் ஷா ட்வீட்

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், தனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திதான் என்றும், தான் நலமுடன் உள்ளதாகவும் கூறினார். மேலும், தான் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஹலோ... அமித் ஷாவா... எப்ப சார் வெளிய வருவீங்க?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.