ஹைதராபாத்தைச் சேர்ந்த நதிமுதீன் என்ற இளைஞர் லண்டனின் சுலோ (slough) நகரிலுள்ள "டெஸ்கோ" வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பணி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்ற தகவல் அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் பார்க்கிங் வளாகத்தில் அவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டுள்ளனர்.