ஹைதராபாத்தைச் சேர்ந்த குமார் என்பவர் 2014ஆம் ஆண்டு ‘செர்வ் நீடி’ (Serve Needy) என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி ஏழைகளுக்கும், தெருவில் கேட்பாரன்றிருப்போருக்கும் உணவளிப்பதையே தனது முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார்.
விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக் கிழமை) குமார் ஹைதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனை, ராஜேந்திர நகர், அம்மா நன்னா ஆதரவற்றோர் இல்லம் என மூன்று இடங்களில் 1,000 பேருக்கு உணவளித்துள்ளார்.
குமார் ஒரே நாளில் 1,000 பேருக்கு உணவளித்ததை பாராட்டி யுனிவெர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தின் இந்திய தலைவர்களான கேவி ரமணா ராவ், டிஎம் ஸ்ரீலதா ஆகியோர் உலக சாதனையாக அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து குமார் கூறும்போது, 2014ஆம் ஆண்டு நான் தனியாக இந்தத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். தற்போது என்னுடன் 140 தன்னார்வலர்கள் உள்ளனர். எங்களது நிறுவனம் இருக்கும் வரையில் இந்நாட்டில் பசி, பட்டினி என எவரும் இருக்கக் கூடாது என்பதே எங்களது நோக்கம் என்றார்.