பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பல உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். தனது உடலமைப்பால் தற்போது வரை இளமையாக தோற்றமளிக்கும் இவர் சில நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராகவும் உள்ளார்.
இந்நிலையில் கல்ட்.பிட் என்னும் உடற்பயிற்சி நிறுவனத்திற்கு ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக உள்ளார். அவரால் சில பேர் ஒரு வருடத்துக்கான பணம் கொடுத்து அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இதில் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளவும், ரித்திக் ரோஷன் போல் தானும் வரவேண்டும் என்பதற்காக அப்பயிற்சியில் சேர்ந்துள்ளார்.
இந்நிறுவனத்தில் பயிற்சிக்காக இணைந்த ஒருவர் கூறியிருப்பதாவது, தினமும் சரியான பயிற்சி அட்டவணை வழங்கவில்லை என்றும், தொடர்ந்து மூன்று நாள் கூட சரிவர பயிற்சி அளிக்கவில்லை என்றும் இதற்காக பணம் முன்னதாகவே வாங்கிக் கொண்டதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ரித்திக் ரோஷனை நம்பியே, தான் இந்த உடற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன் தன்னுடைய பணம் வீண், தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று ரித்திக் ரோஷன் உள்பட மூன்று பேர் மீது மோசடி வழக்கை புகார் செய்துள்ளார். இது தொடர்பாக ரித்திக் ரோஷன் மீது காவல்துறை ஐபிசி 406, 420 என்று வழக்கின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.