தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஜூன் 7ஆம் தேதி முதல் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் 'மூன்றுநாள் தேசிய மீன் திருவிழா'விற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல வகைகளைச் சேர்ந்த மீன்கள் தயார் செய்யப்பட்டு அங்கு வரும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டில் மீன் சந்தைகளை மேம்படுத்துவது, சுகாதார நலன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படும், இந்த மீன் திருவிழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட எட்டு ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.