ETV Bharat / bharat

'அன்று வெள்ளம், இன்று கரோனா'- 112 ஆண்டுக்கு பின் ரம்ஜான் பாதிப்பு!

ஹைதராபாத்:1908 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். அதனை தொடர்ந்து ஹைதராபாத் வரலாற்றில் இரண்டாவது முறையாக, ரம்ஜான் மாதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் ஹைதராபாத் நகரம் காணப்படுகிறது. மசூதிகளில் தொழுகைள் இல்லை, சந்தைகள் இல்லை மற்றும் பாரம்பரிய விருந்துகளும் இல்லை.

COVID-19  coronavirus  lockdown  Mecca Masjid  Ramzan  ஹைதராபாத்தில் ரம்ஜான் பாதிப்பு, கரோனா வைரஸ், கரோனா பாதிப்பு, கோவிட்-19, வைரஸ், ரம்ஜான், ஹைதராபாத் வெள்ளம்

author img

By

Published : May 2, 2020, 7:00 PM IST

வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஹைதராபாத் புனித ரம்ஜான் மாதத்தில், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுடன் உற்சாகமாகக் காணப்படும். மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். இஸ்லாமியர்கள் நாள் முழுவதும் குர்ஆனை ஓதுவார்கள்.
தொலை தூரத்தில் இருந்து வரும் மக்கள், வெளிநாட்டவர்கள் பழைய நகரத்தில் அமைந்துள்ள மெக்கா மஸ்ஜித்துக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் சுவையான ஹலீம் மற்றும் பிற சிறப்புமிகுந்த உணவுகளை உண்டு மகிழ்வார்கள்.

உண்ணா நோன்பை முறித்துக்கொள்வதற்காக இப்தார் விருந்தில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள். மேலும், பிராத்தனைகளும் செய்வார்கள். வணிக நிறுவனங்களும் இரவு பகலாக திறந்திருக்கும்.
ஆனால், இந்தாண்டு கரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு ஊரடங்கைத் தொடர்ந்து ரம்ஜானுடன் தொடர்புடைய நகர்வுகளை நகரம் காணவில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே பிராத்தனை செய்கின்றனர். இப்தார் விருந்துகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இஸ்லாமிய மத அறிஞர்களும் மக்களை வீட்டிலேயே இருந்து பிராத்தனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மசூதிகளில் பிராத்தனைகள் தவறவிடப்படும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் இப்போதும் வீடுகளில் தவறாமல் பிராத்தனைகளை தொடர்கின்றனர்.

ஹைதராபாத் நகரம் ரம்ஜான் நிகழ்வுகளை இழப்பது இது முதல்முறை அல்ல. 1908ஆம் ஆண்டு நகரத்தைத் தாக்கிய சூறாவளி, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.

அந்த இயற்கை இடர்பாடுகளுக்கு பின்னர், கிட்டத்தட்ட 112 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு ரம்ஜான் களையிழந்து காணப்படுகிறது.

'அன்று வெள்ளம், இன்று கரோனா'- 112 ஆண்டுக்கு பின் ரம்ஜான் பாதிப்பு!

ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும்போது, இஸ்லாமியர்கள் எந்தவொரு உணவையும், குடிநீரையும், புகைப்பழக்கத்தையும் தவிர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'புற்றுநோயாளிகளை கரோனா எளிதில் தாக்கும்'- ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.