ETV Bharat / bharat

14ஆம் வயதில் பட்டம்பெற்ற முதல் இந்திய மாணவன்!

author img

By

Published : Nov 21, 2020, 2:34 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த 14 வயது அகஸ்திய ஜெய்ஸ்வால் என்ற மாணவன், தான் மிக இளம் வயதில் பட்டம்பெற்ற முதல் இந்தியன் என்று கூறியுள்ளார். இவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் பட்டம் முடித்திருக்கிறார். அதன் முடிவுகள்கூட அண்மையில்தான் வெளியிடப்பட்டன.

Hyderabad boy 'first Indian' to complete graduation at 14

ஜெய்ஸ்வால் கூறுகையில், தெலங்கானாவில் ஒன்பது வயதில் 10ஆம் வகுப்பை முடித்த முதல் மாணவன் தான்தான் என்றார். அதில், 7.5 தரப் புள்ளி சராசரியைப் (Grade Point Average) பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், அவர் கூறுகையில், "நாட்டிலேயே 14ஆம் வயதில் பி.ஏ. பட்டம் முடித்த முதல் மாணவன் நான்தான். 11 வயதில் தெலங்கானாவில் 63 விழுக்காட்டுடன் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற முதல் மாணவனும் நானே" என்றார்.

ஜெய்ஸ்வால் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரும்கூட.

தனது திறமையைப் பற்றி சிலாகித்துப் பேசும் ஜெய்ஸ்வால், "எனது பெற்றோரே எனது ஆசான்கள், அவர்களின் ஆதரவில் சாத்தியமற்றது போன்ற சவால்களைக் கடந்துவருகிறேன். 1.72 விநாடியில் ஆங்கில அகரவரிசை எழுத்துகளான A முதல் Z வரை என்னால் வேகமாகத் தட்டச்சு செய்ய முடியும்.

என்னால் 100 வரை வாய்ப்பாடு பெருக்கல் அட்டவணைகளை சொல்ல முடியும். என்னால் இரண்டு கைகளாலும் எழுத முடியும். நான் சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளரும்கூட" என்கிறார்.

தான் மருத்துவராக விரும்புவதாகத் தெரிவிக்கும் ஜெய்ஸ்வால், அதற்காக எம்பிபிஎஸ் படிக்கவுள்ளதாகவும் கூறுகிறார்.

அவரது தந்தை அஷ்வினி குமார் ஜெய்ஸ்வால் பேசுகையில், "ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்புவாய்ந்த திறமைகள் இருக்கும், அதனை, பெற்றோர் குழந்தைகள் மீது கவனம்செலுத்தி வெளிக்கொணர வேண்டும். அப்படி செய்தால் ஒவ்வொரு குழந்தையாலும் வரலாற்றை உருவாக்க முடியும்" என்றார்.

சிறுவனின் தாய் பாக்கியலட்சுமி கூறுகையில், "நாங்கள் அவனிடம் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என அடிக்கடிச் சொல்வோம், அவனும் அடிக்கடி கேள்விகளைக் கேட்பான். அதற்கு நாங்கள் அவனுக்கு எளிமையாகப் புரியும்படி நடைமுறையில் (practically) பதில் அளிப்போம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.