காதலுக்கு அடையாளம் என்றதும் பெரும்பாலனோர் நினைவுக்கு வருவது, தாஜ்மஹால். அதை ஹாஜகான் யாருக்காக கட்டி எழுப்பச் சொன்னாரோ? அவர் அதைக் கண்டதும் இல்லை. ஷாஜகானின் காதலை தெரிந்து கொள்ளவும்மில்லை. ஆனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜபல்பூரில் வசிக்கும் பொறியாளர் ஒருவர் நிகழ்கால ஷாஜகான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
கடந்த நான்கு ஆண்டுகளாக தனது மனைவி குமுதானி சுவாச பிரச்னையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவரது கணவர் கியான் பிரகாஷ் மனம் நொந்து போனார். மருத்துவமனையில் தனிமையில் இருக்கும் மனைவி குறித்து அவருக்கு இருந்த கவலை, அவருக்காக வீட்டில் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கத் தூண்டியது.
இதையடுத்து, தங்கள் வீட்டை முழு வசதிகள் அடங்கிய அவசர சிகிச்சை பிரிவாக மாற்றினார். இந்த அறையில் மின்சார வசதி தடைபடாமல் இருக்க சோலார் அமைப்பைப் பொருத்தினார். பொறியாளனாகிய கியான், தனது மனைவிக்காக காற்று சுத்திகரிப்பான், வென்டிலேட்டர் உள்பட பல மருத்துவ கருவிகளை வாங்கினார். மருத்துவ உதவிக்காக ஒரு செவிலியரை நியமித்து ஒவ்வொரு நொடியும் தனது மனைவியின் தேவைகளை அதீத அன்புடன் நிறைவேற்றி வருகின்றார்.
தான் எவ்வித மருத்துவ பயிற்சியும் பெறவில்லை என்றாலும் தனது மனைவிக்கு தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தையும் கியான் பிரகாஷ் செய்து கொடுத்துள்ளார். தவிர, வீட்டை அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றிய கியான் தனது காரையும் ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!